செல்வ உருவாக்கத்தினை நாம் நம்புகின்றோம்

செல்வத்தை உருவாக்கவும், செல்வத்தை உருவாக்கும் வழிவகைகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், ஐடியல் நிதி நிறுவனமானது செல்வத்தை உருவாக்கி, மக்களிடையே நிலவும் அனைத்து வளர்ச்சிக்கான பரிமாணங்களிலும் நிலையான தன்மையையும், ஊடுருவக்கூடிய சக்தி வாய்ந்த நிதித் தள அமைப்பையும் உருவாக்குவதோடு, அதன் நிறுவன மதிப்பீட்டில் தடையற்றதாகவும் அமைந்துள்ளது. மைக்ரோ மற்றும் SME நிதியுதவி, விளிம்பு வர்த்தகம், முதலீட்டு சேமிப்பு, பாதுகாப்பான குறிப்புகள், குத்தகை மற்றும் வாடகை கொள்வனவு என்பனவற்றை உள்ளடக்கியபரந்த மற்றும் விரிவான நிதி சேவைகள் மூலம், IFL ஆனது நிலையான நிதி அபிவிருத்தியில் பொருத்தமான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐடியல் நிதி நிறுவனம் என்பது, இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலின் கீழ் பதிவு செய்யப்பட்டதும், இரு தொலைநோக்கு கம்பனிகளால் இயக்கப்படும் நடைமுறைக்கு உட்பட்டது. இதன் ஆரம்பத் தளமானது, இலங்கையின் வளர்ந்துவரும் பொருளாதார அபிவிருத்திக்கான நோக்கம் மற்றும் திட்டங்களை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளது. இலங்கையின் ஐடியல் மோட்டர்ஸ் (தனியார்) லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் மூலோபாய பங்குதாரரான ஜப்பானின் நிஷியா மோக்கோ கம்பெனி லிமிடெட் ஆகியவை இணைந்து புதியதொரு தரநிலையை உருவாக்குவதன் மூலம் ஐடியல் நிதி நிறுவனத்தை உருவாக்கின. நிலையான அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டின் மேலதிக திட்டங்களுக்குரிய வர்த்தக மையமாக மாறும் இலங்கையின் நோக்கினை நிச்சயமாக இது நிரப்புகின்றது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட உலகளாவிய நிபுணர்களால் நடாத்தப்பட்ட நாட்டின் நிதித் தளவமைப்பு பற்றிய கற்கை, சுயாதீன கருத்துக்கள் மற்றும் பகுப்பாய்வு என்பனவற்றினை கருத்தில் கொண்டு, ஐடியல் நிதி நிறுவனமானது ஆக்கிரமிப்பு முதலீடு, கடன் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது முறையே நிதி மிதப்பிற்கு இட்டுச் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐடியல் நிதி நிறுவனத்தின் வணிக மாதிரியானது, வெளிநாட்டு சமபங்கு மற்றும் நீண்ட கால கடன் முதலீட்டின் மூலம் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனத் துறையின் வளர்ச்சிக்கு உந்துதலாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மூலோபாய திட்டமிடல், இலக்கு கணிப்புக்கள் மற்றும் நடைமுறை வியாபாரத் திட்டம் ஆகியவற்றின் மூலம் இத்துறைக்கு உகந்ததாக காணப்படுகின்றது. நாட்டின் முக்கிய மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்பது கிளைகள் மூலம் ஐடியல் நிதி நிறுவனத்தின் பாதையை வளர்ப்பதற்கான திட்டங்கள் அமைந்துள்ள அதே சமயம், தொழில்சார் நிர்வாக குழுவினர், குறித்த தொழிற்துறை மற்றும் பெருநிறுவன காரியதரிசிகளின் அனுபவத்தைப் பெறுவதோடு, அவர்களின் வழிநடத்துதலையும், ஊக்குவிப்பினையும் பெறுவதன் மூலம், அடைய விரும்பும் வளர்ச்சி நோக்கத்திற்கான தூண்டுதலையும் ஊக்குவிப்பையும் பெற்றுகொள்வது மிகவும் பொருத்தமாகவுள்ளது.